உலக டூர் பேட்மிண்டன்: சாத்விக்-சிராஜ் ஜோடி அசத்தல் வெற்றி
சாத்விக்-சிராஜ் ஜோடி, சீனாவின் லியாங் வெய் கெங்- வாங் சாங் இணையை சந்தித்தது.;
ஹாங்சோவ்,
டாப்-8 வீரர், வீராங்கனைகள் மற்றும் ஜோடிகள் மட்டுமே பங்கேற்கும் உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நேற்று தொடங்கியது.
இரட்டையர் பந்தயத்தில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி தங்களது முதல் ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவர்களான சீனாவின் லியாங் வெய் கெங்- வாங் சாங் இணையை சந்தித்தது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி சாத்விக்- சிராக் கூட்டணி 12-21, 22-20, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. அடுத்து இவர்கள் இந்தோனேசியாவின் பேஜர் அல்பியான்- முகமது ஷோகிபுல் பிக்ரி ஜோடியுடன் இன்று மோதுகிறார்கள்.