கேன்டிடேட் செஸ் போட்டி: 6-வது சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி

கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது

Update: 2024-04-11 10:57 GMT

டொராண்டோ,

உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 8 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர்.14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 6-வது ரவுண்டு நேற்று நடந்தது.

தமிழக வீரர் கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த ஹிகாரு நகமுராவை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் டிரா செய்தார்.

மேலும் மற்றொரு தமிழக வீரர் பிரக்ஞானந்தா, அஜர் பைஜானை சேர்ந்த நிஜாத் அபாசோவ்வை எதிர் கொண்டார். அதில் 45-வது காய் நகர்த்தலுக்கு பிறகு பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.அதே போல் மற்றொரு இந்திய வீரரான விதித் குஜராத்தி, 6-வது சுற்றில் பிரான்சின் அலிரேசா பிரோஸ்ஜாவை தோற்கடித்தார்.

6 சுற்றுகள் முடிவில் இயன் நெபோம்னியாச்சி , குகேஷ் ஆகியோர் தலா 4 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர். பிரக்ஞானந்தா 3.5 புள்ளியுடன் 3 முதல் 4-வது இடத்திலும், விதித் குஜராத்தி 3 புள்ளிகளுடன் 5 முதல் 6-வது இடத்திலும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்