கேன்டிடேட் செஸ்: 7-வது சுற்றில் பிரக்ஞானந்தா டிரா - குகேஷ் தோல்வி

கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது.

Update: 2024-04-12 12:24 GMT

Image Courtesy: Twitter / @chesscom_in

டொராண்டோ,

உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்றுள்ளனர்.14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 7-வது ரவுண்டு நடந்தது.

சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த சுற்றில் பிரான்சின் அலிரேசா பிரோஸ்ஜாவை சந்தித்தார். கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் எதிர்பாராதவிதமாக 40-வது நகர்த்தலுக்கு பிறகு தோல்வி அடைந்தார். இந்த தோல்வியால் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த அவர் 2-வது இடத்துக்கு பின்தங்கினார்.

மற்றொரு கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா அமெரிக்காவை சேர்ந்த பேபியானோவுடன் மோதினார். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இன்னொரு இந்திய வீரர் விதித் குஜாராத்தி அஜர்பைஜானின் நிஜாத் அபாசோவுடன் மோதிய போட்டியும் டிரா ஆனது.

7 சுற்றுகள் முடிவில் இயன் நெபோம்னியாச்சி ( ரஷியா ) 4.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். குகேஷ், பேபியானோ , பிரக்ஞானந்தா ஆகியோர் தலா 4 புள்ளிகளுடன் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர். விதித் குஜராத்தி 3 .5 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்