உலகக்கோப்பை கிரிக்கெட்: தொடக்க விழாவிற்கு 3500 போலீசார் பாதுகாப்பு

10 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

Update: 2023-10-05 03:08 GMT

ஆமதாபாத்,

நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் அரங்கேறும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் முதல்முறையாக தகுதி பெறவில்லை.

இந்நிலையில் தொடக்க போட்டியின் பாதுகாப்பு பணியில் சுமார் 3500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, உலககோப்பை போட்டிக்கான தொடக்க விழா ஆமதாபாத்தில் இன்று தொடங்க உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. சுமார் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதில் 3 கூடுதல் கமிஷனர்கள், 13 டி.சி.பி அந்தஸ்து உள்ள அதிகாரிகள், 18 ஏ.சி.பி க்கள் உட்பட 3500 போலீசார் உள்ளனர். மேலும் 500 ஊர்க்காவல்படையினரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 9 வெடிகுண்டை செயலிழக்க செய்யும் குழுக்களும் பணியில் உள்ளனர்.

மேலும் மைதானத்தை சுற்றி போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. இதனை போலீசாரின் சமூக ஊடக கணக்கில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் , அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்