இந்திய ஓபன் பேட்மிண்டன்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் அன் சியாங் பட்டம் வென்றார்
இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அன் சியாங் பட்டம் வென்றார்.;
image courtesy: BAI Media twitter
புதுடெல்லி,
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை அஹானே யமகுச்சி, தென் கொரியா வீராங்கனை அன் சியாங்குடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் செட்டை 21-15 என்ற செட் கணக்கில் யமகுச்சி கைப்பற்றினார். அடுத்த இரண்டு செட்களை 21-16, 21-12 என்ற கணக்கில் கைப்பற்றிய அன் சியாங் வெற்றி பெற்று இந்திய ஓபன் பேட்மிண்டன் பட்டத்தை வென்றார்.
இதையடுத்து இந்திய ஓபன் பட்டத்தை வென்ற முதல் கொரிய வீரரானார் அன் சியாங்.