உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்

உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானில் உள்ள புகோகா நகரில் நடந்து வருகிறது.;

Update:2023-07-25 02:50 IST

கோப்புப்படம்

புகோகா,

உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானில் உள்ள புகோகா நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தயத்தின் தகுதி சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீஹரி நட்ராஜ் 55.26 வினாடியில் இலக்கை கடந்து தனது பிரிவில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டதுடன், ஒட்டுமொத்தத்தில் 31-வது இடம் பெற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறினார்.

கர்நாடகத்தை சேர்ந்த 22 வயதான நட்ராஜ் கடந்த 2021-ம் ஆண்டு 53.77 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் 2 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றவரான மற்றொரு இந்திய வீரர் சஜன் பிரகாஷ் 91 பேர் கலந்து கொண்ட 50 மீட்டர் பட்டர்பிளை பந்தயத்தில் 24.93 வினாடியில் இலக்கை எட்டிப்பிடித்து 57-வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்தார். 400 மீட்டர் பிரீஸ்டைல் பந்தயத்தில் இன்னொரு இந்திய வீரர் குஷாக்ரா ரவாத் 3 நிமிடம் 59.03 வினாடியில் நீந்தி வந்து 35-வது இடமே பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்