சர்வதேச பாரா-பேட்மிண்டன் இறுதி போட்டிக்கு இந்தியாவின் பிரமோத் பகத் முன்னேற்றம்

நான்கு நாடுகளுக்கான பாரா-பேட்மிண்டன் இறுதி போட்டிக்கு உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள பிரமோத் பகத் முன்னேறியுள்ளார்.

Update: 2022-07-17 02:21 GMT



டப்ளின்,



அயர்லாந்து நாட்டில் நான்கு நாடுகளுக்கான சர்வதேச பாரா-பேட்மிண்டன் 2022 போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நேற்று நடந்த போட்டி ஒன்றில், உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள பிரமோத் பகத் மற்றும் ஜப்பானின் டைசுகே புஜிஹரா விளையாடினர்.

இந்த போட்டியில், 21-15, 21-15 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பான் வீரரை வீழ்த்தி பகத் வெற்றி பெற்றார். இதன்பின்னர் பேசிய பகத், புஜிஹரா உண்மையில் நன்றாக விளையாடினார். ஆனால், எனது போட்டியை தக்க வைக்க என்னால் முடிந்தது. இந்த பணி இதனுடன் முடிந்து விடவில்லை. நாளை நடைபெறவுள்ள இறுதி போட்டியை எதிர்பார்த்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இன்றைய இறுதி போட்டியில் இங்கிலாந்தின் டேனியல் பெத்தேல் என்பவரை பகத் சந்திக்க இருக்கிறார். பாராலிம்பிக் போட்டியில் டேனியலை வீழ்த்தி, பேட்மிண்டனில் முதல் தங்க பதக்கம் வென்ற இந்தியர் என்ற பெருமையை பெற்றவர் பகத். மற்றொரு போட்டியில் இந்தியாவின் குமார் நித்தேஷ் மற்றும் டேனியல் பெத்தேல் விளையாடியதில், 21-14, 21-13 நேர் செட் கணக்கில் டேனியல் வெற்றி பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்