தேசிய விளையாட்டு போட்டியில் காயம் காரணமாக பி.வி.சிந்து விலகல்
36-வது தேசிய விளையாட்டு போட்டியில் காயம் காரணமாக பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கலந்து கொள்ளவில்லை.;
Image Courtesy : AFP
ஐதராபாத்,
36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள 7 நகரங்களில் வருகிற 29-ந் தேதி முதல் அக்டோபர் 12-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டியில் ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்ற தெலுங்கானா பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கலந்து கொள்ளவில்லை. சமீபத்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையாததால் பங்கேற்கவில்லை என்று சிந்து தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.