பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி : இந்தியாவின் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்

தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பானின் கோபே நகரில் நடைபெற்று வருகின்றன;

Update:2024-05-19 21:57 IST

Image : @Media_SAI

டோக்கியோ,

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பானின் கோபே நகரில் நடைபெற்று வருகின்றன. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில், ஆண்கள் பிரிவில் இந்தியாவின் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தி உள்ளார். நிஷாத் குமார் 1.99 மீட்டர் உயரத்தை தாண்டி 2வது இடம் பிடித்துள்ளார்.

மகளிருக்கான குறைந்த தூர(200 மீட்டர்) ஓட்டப்போட்டியில் இந்தியாவின் பிரீத்தி பால் வெண்கலம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 30.49 விநாடிகளில் கடந்து 3வது இடம் பிடித்துள்ளார். இதன்மூலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளார் பாரா ஒலிம்பிக் போட்டிக்கு பிரீத்தி பால் தகுதி பெற்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்