பாரா பேட்மிண்டன் வீரருக்கு ரூ.3.20 லட்சம் நிதி உதவி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

மாற்றுத்திறனாளி பாரா பேட்மிண்டன் வீரர் எம்.எஸ்.சுதர்சன் பாரா பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்க உள்ளார்.;

Update:2023-08-02 02:33 IST

சென்னை,

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பாரா பேட்மிண்டன் வீரர் எம்.எஸ்.சுதர்சன் அக்டோபர் மாதம் மேற்கு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பாரா பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

அவருக்கு போட்டியில் கலந்து கொள்வதற்கான நுழைவு கட்டணம், விமான கட்டணம், பயிற்சி, உணவு மற்றும் தங்கும் கட்டணமாக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து ரூ.3.20 லட்சத்திற்கான காசோலையை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை முகாம் அலுவலகத்தில் வழங்கினார்.

மேலும் டெல்லியில் நடந்த தேசிய செரிபிரல் பால்சி நீச்சல் சாம்பியன்ஷிப்பில் பதக்கங்கள் வென்ற பெருமூளை வாதத்தினால் பாதிக்கப்பட்ட 5 நீச்சல் வீரர்கள் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, எஸ்.டி.ஏ.டி. உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, சங்க நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்