இதுதான் எனது லட்சியம் - நேத்ரா குமணன் பேட்டி

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக பாய்மரபடகு வீராங்கனை நேத்ரா குமணன் தகுதி பெற்றுள்ளார்.

Update: 2024-04-29 05:02 GMT

சென்னை,

33-வது ஒலிம்பிக் போட்டி ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பாரீசில் நடக்கிறது. இதற்கான பாய்மர படகு போட்டிக்கான கடைசி தகுதி சுற்று பிரான்சின் ஹயேர்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான தனிநபர் லேசர் ரேடியல் பிரிவில் இந்திய வீராங்கனை நேத்ரா குமணன் 67 நிகர புள்ளிகளுடன் 5-வது இடத்தை பிடித்தார். இதன் மூலம் அவர் வளர்ந்து வரும் நாடுகளுக்கான திட்டத்தின் அடிப்படையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான கோட்டாவை உறுதி செய்தார்.

சென்னையை சேர்ந்த 26 வயது நேத்ரா குமணன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது இது 2-வது முறையாகும். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வரும் நேத்ரா குமணன் 3 ஆண்டுக்கு முன்பு நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பாய்மரப் படகு வீராங்கனை நேத்ரா குமணன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பாரீஸ் ஒலிம்பிக்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எனது லட்சியம். தொடர்ந்து ஊக்கமளித்து வரும் பெற்றோருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நன்றி. என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்