வியெல்டா சர்வதேச சைக்கிள் பந்தய தொடர்: 5-வது சுற்றில் ஸ்பெயின் வீரர் வெற்றி
மொத்தம் 187 கி.மீ. தூரத்திற்கு நடைபெற்ற 5-வது சுற்று போட்டியில் ஸ்பெயின் வீரர் மார்க் சோலர் வெற்றி பெற்றார்.;
மேட்ரிட்,
ஸ்பெயின் நாட்டின் பில்போ பகுதியில், வியெல்டா சர்வதேச சைக்கிள் பந்தய தொடர் நடைபெற்று வருகிறது. மொத்தம் 21 சுற்றுகளாக நடைபெறும் இந்த சைக்கிள் பந்தய தொடரின் 5-வது சுற்று 187 கி.மீ. தூரத்திற்கு நடைபெற்றது.
மலைப்பாங்கான பகுதிகளில் வீரர்கள் சீறிப்பாய்ந்த நிலையில், பந்தய தூரத்தை 4 மணி நேரம் 15 நிமிடங்களில் கடந்து ஸ்பெயின் வீரர் மார்க் சோலர் வெற்றி பெற்றார். இதன் மூலம் 2 ஆண்டுகளுக்குப் பிறகு வியெல்டா சர்வதேச சைக்கிள் பந்தய தொடரில் ஸ்பெயின் நாட்டிற்கு வெற்றி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.