உலக தடகள சாம்பியன்ஷிப்; மகளிருக்கான 3000 மீட்டர் ஸ்டீப்பிள் சேஸில் இந்தியாவின் பருல் சவுத்ரி 11வது இடம்
மகளிருக்கான 3000 மீட்டர் ஸ்டீப்பிள் சேஸில் இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி 11வது இடம் பிடித்தார்.;
image courtesy;AFP
புடாபெஸ்ட்,
19வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்று வருகின்றன.
இதில் நடந்த மகளிருக்கான 3000 மீட்டர் ஸ்டீப்பிள் சேஸில் இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி 11வது இடம் பிடித்தார். மேலும் பந்தய தூரத்தை 9.15.31 நிமிடங்களில் கடந்து புதிய தேசிய சாதனையையும் படைத்துள்ளார்.
இதன் மூலம் அடுத்தாண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்.