உலக பேட்மிண்டன் தரவரிசை; எச்.எஸ்.பிரனாய் முன்னேற்றம்...!!

நடந்து முடிந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரனாய் வெண்கல பதக்கம் வென்றார்.;

Update:2023-08-29 17:44 IST

image courtesy; AFP

புதுடெல்லி,

28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் நடைபெற்றது. அதில் தாய்லாந்து வீரர் குன்லாவுத் விதித் சரண் தங்கப்பதக்கம் வென்றார்.

இந்நிலையில் உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 3 இடங்கள் முன்னேறி தனது சிறந்த தரநிலையாக 6-வது இடத்தை பிடித்துள்ளார். நடந்து முடிந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம் அவர் தரவரிசையில் முன்னேறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்