பெண்கள் உலக குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனைகள் அபாரம்

13-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.;

Update:2023-03-18 06:55 IST

image courtesy: Boxing Federation twitter

புதுடெல்லி,

13-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் இந்தியாவின் ஷாஷி சோப்ரா (63 கிலோ உடல் எடைப்பிரிவு) 5-0 என்ற கணக்கில் கென்யாவின் வாங்கி டெராசியாவை வீழ்த்தி வெற்றியோடு தொடங்கினார்.

இதே போல் 60 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஜாய்ஸ்மின் லம்போரியா, தான்சானியாவின் நியம்பேகா பீட்ரிஸ் அம்ரோசை தோற்கடித்தார். இந்த ஆட்டத்தில் ஜாய்ஸ்மினின் சரமாரியான தாபக்குதலை சமாளிக்க முடியாமல் பீட்ரிஸ் திண்டாடியதால், ஆட்டத்தை பாதியில் நிறுத்திய நடுவர், 21 வயதான ஜாய்ஸ்மின் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

அதே சமயம் சுருதி யாதவ் (70 கிலோ) 0-5 என்ற கணக்கில் சீனாவின் ஜோவ் பானிடம் பணிந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்