இறுதிப்போட்டிக்கு போபண்ணா ஜோடி முன்னேற்றம்

சென்னை ஓபன் டென்னிசில் நேற்றிரவு நடந்த இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா– ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 7–6 (4) 6–4 என்ற நேர் செட் கணக்கில் நிகோலஸ் மோன்ரோ (அமெரிக்கா)– ஆர்டெம் சிடாக் (நியூசிலாந்து) இணையை விரட்டியடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி

Update: 2017-01-07 21:16 GMT

சென்னை,

சென்னை ஓபன் டென்னிசில் நேற்றிரவு நடந்த இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா– ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 7–6 (4) 6–4 என்ற நேர் செட் கணக்கில் நிகோலஸ் மோன்ரோ (அமெரிக்கா)– ஆர்டெம் சிடாக் (நியூசிலாந்து) இணையை விரட்டியடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் போபண்ணா ஜோடி, இன்னொரு இந்தியர்களான புராவ் ராஜா–திவிஜ் சரண் இணையுடன் மோதுகிறது. ஒற்றையர் ஆட்டம் முடிந்ததும் இரட்டையர் இறுதி ஆட்டம் நடைபெறும். 2012–ம் ஆண்டுக்கு பிறகு சென்னை ஓபனில் இந்தியர்கள் சாம்பியன் கோப்பையை வெல்ல இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்