டென்னிஸ் தரவரிசை: மீண்டும் முதலிடத்தை பிடிக்கிறார், நடால்
ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே, சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறார்.
சின்சினாட்டி,
3–ம் நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் முதுகுவலியால் அவதிப்படுவதால் சின்சினாட்டி டென்னிசில் விளையாட இயலாது என்று கடைசி நேரத்தில் கூறி விட்டார். இதில் பெடரர் பங்கேற்று இருந்தால் இந்த தொடரின் வெற்றி பெடரருக்கும், நடாலுக்கும் இடையே ‘நம்பர் ஒன்’ இடத்தை தீர்மானிக்கும் வகையில் அமைந்திருக்கும். பெடரரின் விலகலால் நடாலின் முதலிடம் சிக்கலின்றி உறுதியாகி விட்டது.
31 வயதான நடால் கூறுகையில், ‘சின்சினாட்டி டென்னிசில் பெடரர் விளையாடாதது என்பது வருத்தமான செய்தி. நம்பர் ஒன் இடத்துக்கு மீண்டும் திரும்புவது என்னை பொறுத்தவரை சிறப்பு வாய்ந்த ஒன்று’ என்றார்.