ஆண்டின் இறுதிவரை முதலிடத்தை தக்கவைத்தார், நடால்

பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது.

Update: 2017-11-01 22:00 GMT
பாரீஸ்,

பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது. இதில் நேரடியாக 2-வது சுற்றில் களம் இறங்கிய ‘நம்பர் ஒன்’ வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் தென்கொரியாவின் சுங் ஹியோனை தோற்கடித்தார்.

இதன் மூலம் இந்த ஆண்டின் இறுதி வரை நடால் ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

இவ்வாறு ஆண்டின் இறுதியை நம்பர் ஒன் இடத்துடன் நடால் நிறைவு செய்வது இது 4-வது முறையாகும்.

மேலும் செய்திகள்