தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சூப்பர் லீக் சென்னையில் நடக்கிறது

இந்து ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சூப்பர் லீக் போட்டி சென்னையில் வருகிற 24–ந் தேதி முதல் 26–ந் தேதி வரை நடக்கிறது.

Update: 2017-11-03 21:36 GMT

சென்னை,

இந்து ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சூப்பர் லீக் போட்டி சென்னையில் வருகிற 24–ந் தேதி முதல் 26–ந் தேதி வரை நடக்கிறது. இதில் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த அணிகளுக்கான வீரர்கள் ஏலம் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளனர். 8 அணிகளும் மொத்தம் 60 சிறந்த வீரர்–வீராங்கனைகளை ஏலத்தில் எடுத்துள்ளது. அணியில் 6 வகையான வயது பிரிவினர் இடம் பெறுவார்கள். சீனியர் வீரர்களில் பிரபாகரன் அதிகபட்சமாக ரூ.52,500–க்கு ஏலம் போய் இருக்கிறார். சீனியர் வீராங்கனைகளில் ரீத் ரிஷ்யா அதிகபட்சமாக ரூ.40,500–க்கு ஏலம் போனார்.

மேலும் செய்திகள்