கத்தார் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் விலகல்

கத்தார் ஓபனில் களம் காண திட்டமிட்டிருந்த ஜோகோவிச் அந்த போட்டியில் இருந்தும் விலகி இருக்கிறார்.

Update: 2017-12-30 22:45 GMT
டோகா,

முன்னாள் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரரும், 12 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜூன் மாதம் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டிக்கு பிறகு எதிலும் கலந்து கொள்ளவில்லை. புதிய சீசனில், டோகாவில் நாளை தொடங்கும் கத்தார் ஓபனில் களம் காண திட்டமிட்டிருந்த ஜோகோவிச் அந்த போட்டியில் இருந்தும் விலகி இருக்கிறார். ‘துரதிர்ஷ்டவசமாக காயம் முழுமையாக சீராகவில்லை. முழங்கையில் இன்னும் வலி இருக்கிறது.

அதனால் கத்தார் ஓபனில் இருந்து விலக வேண்டியதாகி விட்டது. 100 சதவீதம் உடல்தகுதியுடன் இருந்தால் மட்டுமே போட்டியில் பங்கேற்பேன்’ என்று 30 வயதான ஜோகோவிச் கூறியுள்ளார். இதன் மூலம் மெல்போர்னில் 15-ந்தேதி தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.

மேலும் செய்திகள்