ஷின்ஜென் ஓபன் டென்னிஸ் கால்இறுதியில் ‌ஷரபோவா

ஷின்ஜென் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.

Update: 2018-01-02 21:15 GMT

ஷின்ஜென்,

ஷின்ஜென் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் 5 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான ரஷியாவின் மரியா ‌ஷரபோவா 4–6, 6–3, 6–2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கியை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனை ஜரினா டியாஸ் 6–3, 6–7 (5–7), 6–4 என்ற செட் கணக்கில் சீனாவின் ஷாங் ஹூய்யை தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். கால்இறுதி ஆட்டத்தில் ‌ஷரபோவா, கஜகஸ்தான் வீராங்கனை ஜரினா டியாஸ்சை சந்திக்கிறார்.

மேலும் செய்திகள்