ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தகுதி சுற்றில் யுகி பாம்ப்ரி அபாரம்

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நாளை மறுநாள் தொடங்குகிறது.

Update: 2018-01-12 21:45 GMT
மெல்போர்ன்,

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நாளை மறுநாள் தொடங்குகிறது. தற்போது இதன் தகுதி சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த தனது 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 122-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி, உலக தரவரிசையில் 183-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் கார்லோஸ் தபெர்னெரை எதிர்கொண்டார். 57 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி 6-0, 6-2 என்ற நேர்செட்டில் எளிதில் வெற்றி பெற்றார். 3-வது மற்றும் கடைசி தகுதி சுற்று ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி, கனடா வீரர் பீட்டர் போலன்சியை சந்திக்கிறார். இதில் யுகி பாம்ப்ரி வெற்றி பெற்றால் பிரதான சுற்றுக்கு முன்னேறுவார்.

மேலும் செய்திகள்