முதலிடத்தை பிடிக்கும் முனைப்பில் பெடரர்

முதலிடத்தை பிடிக்கும் முனைப்பில் பெடரர் ரோட்டர்டாம் போட்டியில் ஆடுகிறார். சமீபத்தில் ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்று அசத்திய சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் இந்த போட்டியில் பங்கேற்கிறார்.

Update: 2018-02-11 23:00 GMT
ரோட்டர்டாம்,

நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டி இன்று (திங்கட்கிழமை) முதல் 18-ந்தேதி வரை நடக்கிறது. சமீபத்தில் ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்று அசத்திய சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் இந்த போட்டியில் பங்கேற்கிறார். முதல் சுற்றில் தகுதி நிலை வீரர் ருபென் பிமெல்மான்சை (பெல்ஜியம்) எதிர்கொள்கிறார். வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) ஆகிய முன்னணி வீரர்களும் களம் இறங்குகிறார்கள்.

தற்போது உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள 36 வயதான ரோஜர் பெடரர், இந்த தொடரில் அரைஇறுதியை எட்டினால் நடாலை (ஸ்பெயின்) பின்னுக்கு தள்ளிவிட்டு மீண்டும் முதலிட அரியணையில் ஏறி விடுவார். அவ்வாறு நிகழ்ந்தால், அதிக வயதில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த வீரர் என்ற மகத்தான பெருமைக்கும் சொந்தக்காரர் ஆகி விடுவார்.

மேலும் செய்திகள்