மியாமி டென்னிஸ்: கால்இறுதியில் வீனஸ் வில்லியம்ஸ்

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4–வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 8–வது இடத்தில் இருக்கும் 37 வயதான அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் 5–7, 6–1, 6–2 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியன் ஜோஹன்னா கோன்டாவை (இங்கிலாந்து) வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில், குடும்ப பிரச்சினை காரணமாக 8 மாத இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் களம் திரும்பிய முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 6–2, 6–2 என்ற நேர்செட்டில் அக்னிஸ்கா ராட்வன்ஸ்காவை (போலந்து) சாய்த்து கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். ஒஆண்

Update: 2018-03-27 21:30 GMT

மியாமி,

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4–வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 8–வது இடத்தில் இருக்கும் 37 வயதான அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் 5–7, 6–1, 6–2 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியன் ஜோஹன்னா கோன்டாவை (இங்கிலாந்து) வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில், குடும்ப பிரச்சினை காரணமாக 8 மாத இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் களம் திரும்பிய முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 6–2, 6–2 என்ற நேர்செட்டில் அக்னிஸ்கா ராட்வன்ஸ்காவை (போலந்து) சாய்த்து கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

ஒஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3–வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5–வது இடம் வகிக்கும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 2–6, 6–2, 6–4 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீரர் டேவிட் பெரரை தோற்கடித்து 4–வது சுற்றை எட்டினார்.

மேலும் செய்திகள்