ஹாலே சர்வதேச டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பெடரர் தோல்வி

ஜெர்மனியின் ஹாலே நகரில் கெர்ரி வெபர் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்தது.

Update: 2018-06-24 21:13 GMT
ஹாலே, 

ஜெர்மனியின் ஹாலே நகரில் கெர்ரி வெபர் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி சுற்றில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 9 முறை சாம்பியனுமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், தரவரிசையில் 34-வது இடம் வகிக்கும் குரோஷியாவின் போர்னா கோரிச்சுடன் மோதினார். 2 மணி 6 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த மோதலில் 21 வயதான கோரிச் 7-6 (6), 3-6, 6-2 என்ற செட் கணக்கில் பெடரருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றார். இதன் மூலம் புல்தரை போட்டியில் தொடர்ச்சியாக 20 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த பெடரரின் வீறுடை முடிவுக்கு வந்தது. அத்துடன் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள தவறியதால் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தையும் பறிகொடுத்தார். இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் நடால்(ஸ்பெயின்) மறுபடியும் முதலிட அரியணையில் ஏறுகிறார்.

மேலும் செய்திகள்