டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ்: மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் சாம்பியன்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் சாம்பியன் பட்டம் வென்றார்.
லண்டன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)- ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) மோதினர். 

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 6-3,6-3 என்ற நேர் செட் கணக்கில் செரீனா வில்லியம்சை தோற்கடித்த ஏஞ்சலிக் கெர்பர், சாம்பியன் பட்டம் வென்றார்.  ஏஞ்சலிக் கெர்பர், விம்பிள்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வது இதுதான் முதல் தடவையாகும்.