மராட்டிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் அமெரிக்க வீரரை சந்திக்கிறார், குணேஸ்வரன்

மராட்டிய ஓபன் டென்னிஸின் முதல் சுற்று ஆட்டத்தில், தமிழக விரர் குணேஸ்வரன் அமெரிக்க வீரரை சந்திக்கிறார்.

Update: 2018-12-29 22:30 GMT
புனே,

மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நாளை (திங்கட்கிழமை) முதல் ஜனவரி 5-ந்தேதி வரை புனேயில் நடக்கிறது. இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் (டிரா) மூலம் நேற்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன், நடப்பு சாம்பியனான பிரான்சின் ஜிலெஸ் சிமோன் ஆகியோருக்கு ‘பை’ சலுகை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் நேரடியாக 2-வது சுற்றில் விளையாடுவார்கள்.

இந்திய இளம் வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தனது முதல் சுற்றில் அமெரிக்காவின் மைக்கேல் மோவை சந்திக்கிறார். மற்றொரு தமிழக வீரர் ராம்குமாருக்கு முதல் சுற்று கடினமாக அமைந்துள்ளது. அவர் 97-ம் நிலை வீரரான மார்செல் கிரானோலர்சுடன் (ஸ்பெயின்) மல்லுகட்டுகிறார். இரட்டையர் பிரிவில் போட்டித் தரநிலையில் முதலிடம் வழங்கப்பட்டுள்ள இந்தியாவின் ரோகன் போபண்ணா- திவிஜ் சரண் ஜோடி, ராடு அல்போட் (மால்டோவா)- மாலெக் ஜாஸிரி (துனிசியா) இணையை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இந்திய மூத்த வீரர் லியாண்டர் பெயஸ், மெக்சிகோவின் மிக்யூல் ஏஞ்சல் ரியேசுடன் கைகோர்த்து களம் காணுகிறார்.

மேலும் செய்திகள்