காதலியுடன் திருமண நிச்சயம் செய்தார், ரபெல் நடால்

ஸ்பெயினைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் 32 வயதான ரபெல் நடால், மேரி பெரேலோ என்ற பெண்ணை கடந்த 10 ஆண்டுக்கு மேலாக காதலித்து வருகிறார்.

Update: 2019-01-31 22:15 GMT
மாட்ரிட்,

முக்கியமான போட்டிகளின் போது மைதானத்திற்கு சென்று நடாலை உற்சாகப்படுத்தும் பெரேலோ, நடாலின் டென்னிஸ் அகாடமியையும் கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் 8 மாதத்திற்கு முன்பே மேரி பெரேலோவுக்கு மோதிரம் அணிவித்து திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டு விட்டதாகவும், அந்த தகவலை இதுவரை ரகசியமாக வைத்திருந்ததாகவும் நடால் தற்போது கூறியுள்ளார். ஆண்டின் இறுதியில் இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்