ஜூனியர் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியை நடத்தும் வாய்ப்பை இழந்த இந்தியா

ஜூனியர் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது.

Update: 2019-03-19 22:45 GMT
புதுடெல்லி,

இந்தியா, பாகிஸ்தான் உள்பட 16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் டேவிஸ் கோப்பை டென்னிஸ் (16 வயதுக்குட்பட்டோர்) போட்டி ஏப்ரல் 8-ந்தேதி முதல் 13-ந்தேதி வரையும், பெட் கோப்பை டென்னிஸ் போட்டி ஏப்ரல் 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையும் டெல்லியில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க மத்திய அரசு தடை விதித்து இருப்பதால் இவ்விரு டென்னிஸ் தொடர்களை நடத்தும் வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது. இந்த போட்டிகள் தாய்லாந்துக்கு மாற்றப்படுகிறது.

மேலும் செய்திகள்