வியன்னா ஓபன் டென்னிஸ் ரோகன் போபண்ணா ஜோடி கால்இறுதியில் தோல்வி

வியன்னா ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.

Update: 2019-10-25 21:25 GMT
வியன்னா, 

வியன்னா ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-டேனிஸ் ஷபோவாலோவ் (கனடா) ஜோடி, லூகாஸ் குபோட் (போலந்து)-மார்செலோ மிலோ (பிரேசில்) இணையை சந்தித்தது. 54 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ரோகன் போபண்ணா-டேனிஸ் ஷபோவாலோவ் ஜோடி 0-6, 4-6 என்ற நேர்செட்டில் தோல்வி கண்டு வெளியேறியது.

மேலும் செய்திகள்