ஆஸ்திரேலிய ஓபன் தகுதி சுற்றில் குணேஸ்வரன் தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் தகுதி சுற்றில் குணேஸ்வரன் தோல்வி அடைந்தார்.

Update: 2020-01-18 00:04 GMT
மெல்போர்ன், 

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) மெல்போர்னில் தொடங்குகிறது. இதையொட்டி தற்போது தகுதிசுற்று ஆட்டங்கள் அங்கு நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் தகுதி சுற்றில் முதல் 2 ஆட்டங்களில் வெற்றி கண்ட இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன், நேற்று கடைசி ரவுண்டில் எர்னெஸ்ட்ஸ் குல்பிசுடன் (லாத்வியா) மோதினார். இதில் தரவரிசையில் 122-வது இடம் வகிக்கும் குணேஸ்வரன் 6-7 (2), 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோற்று பிரதான சுற்றை எட்டும் வாய்ப்பை இழந்தார். ஏற்கனவே ராம்குமார், சுமித் நாகல், அங்கிதா ரெய்னா ஆகிய இந்தியர்களும் தோற்று வெளியேறி விட்டனர். இதன் மூலம் இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் ஒற்றையர் பிரிவில் இந்தியர்கள் யாரும் பங்கேற்க முடியாது என்ற பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்