ரோஜர் பெடரர் மற்றும் ஆண்டி முர்ரே ஆகியோருடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசிய ரபேல் நடால்

டென்னிஸ் வீரர்களான ரோஜர் பெடரர் மற்றும் ஆண்டி முர்ரே ஆகியோருடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் டென்னிஸ் நட்சத்திர வீரர் ரபேல் நடால் உரையாடினார்.

Update: 2020-04-22 09:17 GMT
மாட்ரிட்,

டென்னிஸ் டென்னிஸ் நட்சத்திர வீரர் ரபேல் நடால் ரோஜர் பெடரர் மற்றும் ஆண்டி முர்ரே ஆகியோருடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் லாக்டவுன் குறித்துப் பேசினார்.  அப்போது உரையாடிய ரபேல் நடால் கொரோனா வைரஸ் காரணமாக டென்னிஸ் வீரர்கள் பயிற்சி செய்ய முடியவில்லை என வருத்தத்துடன் கூறினார். மேலும் ஸ்பெயின் நாட்டின் ஊரடங்கு உத்தரவு மே 9 வரை நீட்டித்துள்ளதாகவும் இதனால், பயிற்சி செய்ய முடியாத நிலை குறித்து ரபேல் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், நாங்கள் மிகவும் சிக்கலான சூழ்நிலையில் இருக்கிறோம் என தெரிவித்தார். சில விஷயங்கள் லாஜிகலாக இல்லையென்றாலும், விதிகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது என்று கூறினார்.

நான் டென்னிஸ் விளையாடுவதில்லை, என்னுடைய வீட்டில் டென்னிஸ் கோர்ட் இல்லை. அதனால் நான் அதை மிஸ் செய்கிறேன்,” என்று வருத்தமுடன் நடால் கூறினார்.

மேலும், நான் தினசரி உடற்பயிற்சிகளைச் செய்கிறேன். என்னுடைய பயிற்சி மையத்தில் இருந்து சில மெஷின்களை லாக்டவுனுக்கு முன்னதாக கொண்டு வர முடிந்தது. அதனால், என்னால் காலை மற்றும் மாலை சற்று நேரம் பயிற்சி செய்ய முடிகிறது. தலை மற்றும் உடல் இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். அதைத் தான் நான் எல்லா நேரமும் செய்து வருகிறேன்,” என்றார் நடால்.

இதனிடையே தன்னுடைய வலது முழங்கால் குறித்த அப்டேட்டை ரோஜர் பெடரர் நினைவுகூர்ந்தார். கடந்த பிப்ரவரி மாதம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது பரவாயில்லை. முதல் ஆறு வாரங்கள் நன்றாக இருந்தது. இப்போது குணமடைந்து வருகிறேன். ஆனால், எனக்கு நிறைய நேரம் உள்ளது. எந்த அழுத்தமும் இல்லை, எந்த வேகமும் இல்லை. இந்த லாக்டவுன் பற்றிய நல்ல விஷயம் என்னவென்றால், என்னுடைய கால் குணமடைய நேரம் கிடைத்துள்ளது. நான் எப்போது விளையாடக் களத்துக்கு வருவேன் என்பது முக்கியமல்ல என்றார்.

இவ்வாறு அவர்களின் உரையாடல்கள் இருந்தது.

மேலும் செய்திகள்