ரசிகர்கள் இன்றி பிரெஞ்ச் ஓபனை நடத்த திட்டம்?

ரசிகர்கள் இன்றி பிரெஞ்ச் ஓபனை நடத்தும் திட்டம் உள்ளதா என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2020-05-10 23:00 GMT
பாரீஸ், 

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் மே 24-ந்தேதி முதல் ஜூன் 7-ந்தேதி வரை நடக்க இருந்தது. கொரோனா வைரஸ் அச்சத்தால் இந்த போட்டி தள்ளிவைக்கப்பட்டு செப்டம்பர் 20-ந்தேதி முதல் அக்டோபர் 4-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையை பார்க்கும் போது இந்த போட்டி ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்தில் நடத்தப்படலாம் என்று பிரெஞ்ச் டென்னிஸ் சங்க தலைவர் பெர்னர்ட் குடிசெலி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘ரசிகர்கள் இன்றி இந்த போட்டி நடத்தப்படுவதற்கும் வாய்ப்பு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. போட்டி வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்பதே முக்கியம். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ரசிகர்கள் இல்லாமல் நடந்தாலும் அதை டி.வி.யின் மூலம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்’ என்றார். ஆண்டுதோறும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியை ஏறக்குறைய 5 லட்சம் ரசிகர்கள் நேரில் கண்டுகளிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்