கத்தார் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் ரோஜர் பெடரர்

கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

Update: 2021-03-11 22:48 GMT
தோகா, 

ஆண்களுக்கான கத்தார் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. இதில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) வலது முழங்கால் காயத்துக்கு மேற்கொண்ட ஆபரேஷனால் ஓராண்டுக்கு மேலாக ஓய்வில் இருந்து வந்தார். 

இதனால் அமெரிக்க ஓப்பன், பிரெஞ்சு ஓப்பன், ஆஸ்திரேலியா ஓப்பன் (2021) தொடர்களில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், காயத்திலிருந்து மீண்ட அவர் சுமார் 405 நாட்களுக்கு பிறகு கத்தார் ஓப்பன் தொடரில் மறுபிரவேசம் செய்தார்.

இதில் நேரடியாக 2-வது சுற்றில் களம் காணும் வாய்ப்பை பெற்ற அவர் 7-6 (10-8), 3-6, 7-5 என்ற செட் கணக்கில் போராடி டேன் இவான்சை (இங்கிலாந்து) வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 2 மணி 24 நிமிடங்கள் நடந்தது. வெற்றியோ, தோல்வியோ மீண்டும் களம் திரும்பியதே மகிழ்ச்சிதான் என்று 39 வயதான பெடரர் கூறினார்.

மேலும் செய்திகள்