இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: இந்திய வீரர் ராம்குமார் தோல்வி

இன்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில், இந்திய வீரர் ராம்குமார் தோல்வியடைந்தார்.

Update: 2021-10-07 22:58 GMT
இன்டியன்வெல்ஸ், 

இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. 

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 191-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ராம்குமார், 300-ம் நிலை வீரரான ஈகுவடாரின் ராபர்டோ குய்ரோசை சந்தித்தார். இதில் தமிழகத்தை சேர்ந்த ராம்குமார் 4-6, 6-3, 4-6 என்ற செட் கணக்கில் ராபர்டோவிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

மேலும் செய்திகள்