கொரோனா தடுப்பூசி விவகாரம்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஜோகோவிச் பங்கேற்பது சந்தேகம்

கொரோனா தடுப்பூசி விவகாரம்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஜோகோவிச் பங்கேற்பது சந்தேகம்.

Update: 2021-10-19 21:47 GMT
மெல்போர்ன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மெல்போர்ன் நகரில் நடக்கிறது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட வீரர், வீராங்கனைகளுக்கு மட்டுமே இந்த போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்கான ‘விசா’ வழங்கப்படும் என்று மெல்போர்னை உள்ளடக்கிய விக்டோரியா மாகாண அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசி போடாத டென்னிஸ் வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது என்றும் கூறியுள்ளது. இதனால் உலகின் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரரும், நடப்பு சாம்பியனுமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுக்கு சிக்கல் உருவாகியுள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவரான 34 வயதான ஜோகோவிச் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து அவரிடம் கேட்ட போது, ‘நான் மெல்போர்ன் செல்வேனா என்பது இன்னும் எனக்கு தெரியாது. அதே போல் நான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேனா? இல்லையா? என்பதை சொல்லமாட்டேன். தடுப்பூசி செலுத்திக் கொள்வது தனிப்பட்ட விஷயம். அது குறித்து கேள்வி எழுப்புவது தேவையற்றது’ என்றார்.

மேலும் செய்திகள்