ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பாரா? பெடரல் கோர்ட்டு இன்று முடிவு

ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பாரா? பெடரல் கோர்ட்டு இன்று முடிவு

Update: 2022-01-10 03:29 GMT
கோப்புப்படம்
மெல்போர்ன்,

உலகின் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரரும், 9 முறை ஆஸ்திரேலிய ஓபனை வென்ற சாதனையாளருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்  மருத்துவ விதிவிலக்குக்கு தேவையான ஆவணங்கள் இல்லாததால் ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படைஅதிகாரிகள் அவரது விசாவை தடாலடியாக ரத்து செய்து, நாட்டிற்குள் செல்ல அனுமதி மறுத்தனர். 

முதலில், மருத்துவச்சான்றிதழ் கொண்டுவருவதிலிருந்து அவருக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்ட நிலையில், சட்டம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படை தன்மையை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை எடுத்தது

இந்த நிலையில், அவரை நாட்டுக்கு திருப்பி அனுப்புவதா அல்லது ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க அனுமதி அளிப்பதா என்பது குறித்து மெல்போர்னில் உள்ள பெடரல் கோர்ட்டு இன்று விசாரித்து முடிவு செய்ய உள்ளது. இதற்கிடையே, மருத்துவ விதி விலக்கு அளிக்கும் விஷயத்தில் ஜோகோவிச்சுக்கு தாங்கள் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை என்று ஆஸ்திரேலிய அரசு கூறியுள்ளது.

மேலும் செய்திகள்