மியாமி ஓபன் டென்னிஸ்; ஸ்பெயின், நார்வே வீரர்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்

மியாமி ஓபன் டென்னிஸ் அரையிறுதி ஆட்டங்களில் ஸ்பெயின், நார்வே வீரர்கள் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

Update: 2022-04-02 20:04 GMT
மியாமி,

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதி ஆட்டங்களில் நேற்று நடைபெற்றது. 

இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் 7-6 (7-5), 7-6 (7-2) என்ற நேர்செட்டில் நடப்பு சாம்பியன் ஹூர்காச்சையும் (போலந்து), நார்வே வீரர் கேஸ்பர் ரூட் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் செருன்டோலோவையும் தோற்கடித்து இறுதிசுற்றை எட்டினர்.

மேலும் செய்திகள்