சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி - நேற்று முதல் ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை தொடக்கம்

போட்டிகளை நேரில் பார்ப்பதற்கான டிக்கெட்டுகள் நேற்று முதல் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுவதாக தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.

Update: 2022-09-04 01:00 GMT

சென்னை,

சென்னை ஓபன் டபிள்யு.டி.ஏ. 250 சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் ஸ்டேடியத்தில் வரும் செப்டம்பர் 12-ந்தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 18-ந்தேதி வரை இந்த போட்டி ஒரு வாரம் நடக்கிறது. இதில் சர்வதேச அளவிலான விளையாட்டு வீராங்கணைகள் கலந்து கொள்ள உள்ளனர்.

சமீபத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசு மிகவும் பிரம்மாண்ட முறையில் நடத்தி முடித்தது. அதனை தொடர்ந்து தற்போது சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியை நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு கொடுத்துள்ளார். இந்த போட்டியின் முக்கிய ஸ்பான்சராக தமிழக அரசு உள்ளது.

இந்த நிலையில் இந்த போட்டிகளை நேரில் பார்ப்பதற்கான டிக்கெட்டுகள் நேற்று முதல் ஆன்லைன் மூலம் விற்பனை தொடங்கப்பட்டது. இதற்கான டிக்கெட்டுகளை chennaiopenwta.in என்ற இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் எனவும், டிக்கெட்டின் ஆரம்ப விலை 850 ரூபாய் எனவும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்