பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் அரைஇறுதிக்கு முன்னேற்றம்..!

இன்று நடைபெற்ற கால்இறுதி போட்டியில் இகா ஸ்வியாடெக், ஜெசிகா பெகுலாவுடன் மோதினார்.

Update: 2022-06-01 15:39 GMT

image courtesy: Roland-Garros twitter

image courtesy: Roland-Garros twitter

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற கால்இறுதி போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவுடன் மோதினார்.

இந்த போட்டியில் இகா ஸ்வியாடெக், 6-3, 6-2 என்ற செட் கணக்கில் பெகுலாவை வீழ்த்தி வெற்றி பெற்று அரைஇறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு கால்இறுதி போட்டியில் ரஷிய வீராங்கனை வெரோனிகா குடெர்மெடோவா சகநாட்டு வீராங்கனையான டாரியா கசட்கினாவுடன் மோதினார். இந்த போட்டியில் டாரியா 6-4, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வெரோனிகாவை வீழ்த்தி அரைஇறுதி போட்டிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறவுள்ள அரைஇறுதி போட்டியில் கசட்கினா, இகாவுடன் மோதுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்