பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் இகா ஸ்வியாடெக் வெற்றி..!

இன்று நடைபெற்ற அரைஇறுதி போட்டியில் இகா ஸ்வியாடெக், ரஷிய வீராங்கனை டாரியா கசட்கினாவுடன் மோதினார்.

Update: 2022-06-02 15:37 GMT

image courtesy: Roland-Garros twitter

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரைஇறுதி போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷிய வீராங்கனை டாரியா கசட்கினாவுடன் மோதினார்.

இந்த போட்டியில் இகா ஸ்வியாடெக் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் டாரியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். 

Tags:    

மேலும் செய்திகள்