சிம்மம் - வார பலன்கள்

Update: 2023-03-09 20:03 GMT

முன்னேற்றம் காண பாடுபடும் சிம்ம ராசி அன்பர்களே!

இந்த வாரம் வழக்கமான பரபரப்புக்கு குறைவிருக்காது. சில பிரச்சினைகளை தீர்க்க சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீண்ட காலமாக சந்திக்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள், இடமாற்றம் கிடைக்காததை நினைத்து வருத்தப்பட வேண்டாம். உங்களுக்கு தொல்லையாக இருந்தவர்கள், இடமாற்றம் பெற்று செல்வதே உங்களைப் பொறுத்தவரை நன்மைதான். தொழில் செய்பவர்கள், இதுவரை இருந்து வந்த வீழ்ச்சியில் இருந்து ஓரளவுக்கு எழுந்து நிற்பார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள், நிம்மதி அடையக்கூடிய வகையில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். கலைஞர்களுக்கு முன்னணி நிறுவனங்களிடம் இருந்து சில புதிய வாய்ப்புகள் தேடி வர வாய்ப்புண்டு. பெண்கள், ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வர். குடும்பத்தில் குதூகலத்திற்கு குறை ஏதும் இருக்காது.

பரிகாரம்:- இந்தவாரம் அபிராமி அந்தாதி பாராயணம் செய்வதுடன், அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள்.

மேலும் செய்திகள்