இன்றைய ராசிபலன் - 14.07.2025

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.;

Update:2025-07-14 06:19 IST

இன்றைய பஞ்சாங்கம்:-

விசுவாவசு வருடம் ஆனி 30-ம் தேதி திங்கட்கிழமை

நட்சத்திரம்: இன்று காலை 07.58 வரை அவிட்டம் பின்பு சதயம்

திதி: இன்று அதிகாலை 01.50 வரை திரிதியை பின்பு சதுர்த்தி

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 6.15 - 07.15

நல்ல நேரம் மாலை: 4.45 - 5.45

ராகு காலம் காலை: 07.30 - 09.00

எமகண்டம் காலை: 10.30 - 12.00

குளிகை மாலை: 1.30 - 3.00

கௌரி நல்ல நேரம் காலை: 9.15 - 10.15

கௌரி நல்ல நேரம் மாலை: 7.30 - 8.30

சூலம்: கிழக்கு

சந்திராஷ்டமம்: ஆயில்யம்

ராசிபலன்:-

மேஷம்

பொருளாதாரத்தில் உயர்வு உண்டு. பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். அவர்கள் போக்கே சென்று அவர்களை உங்கள் வழியில் வரவழையுங்கள். தம்பதிகள் இணைந்து திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

ரிஷபம்

பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது. கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும். பயணங்களின் போது கவனம் தேவை. வெளிநாட்டில் வசிப்பவர்களால் உங்களது தொழிலுக்கு உதவிபுரிவர். வீட்டைப் பற்றியும் கவனத்தில் கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மிதுனம்

நடைபாதை வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதியவர்களின் நட்பு பலக்கும். வாகனம் ஓட்டும் போது வாகனத்தின் முக்கிய ஆவணங்களை வைத்துக் கொள்வது நல்லது. பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். பணவரவு அதிகரிக்கும். அரசு சம்பந்தப்பட்ட டென்டர் போன்றவைகளில் வெற்றி நிச்சயம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கடகம்

தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை அதாவது தங்கள் தொழில் சார்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் சந்திராஷ்டமம் என்பதால் சாதாரணமாக பேசும் வார்த்தைகள் கூட பிரச்சினையைத் தந்து நிரந்தரமாக பேசாமல் போக வாய்ய்புள்ளதால் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்

சிம்மம்

மார்கெட்டிங்பிரிவினர்களுக்கு இலக்குகளை எட்டிவிடுவீர்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கதவை தட்டும். கமிஷன் மற்றும் இரும்பு தொழிலில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் பேச்சில் நிதானம் தேவை. பொறுமை அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

கன்னி

வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பெண்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து அத்தியாசிய பொருள்களை வாங்குவர். பல வருடங்களாக பிள்ளைபேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். எதிர்பார்த்த ஒரு தொகை கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் உயரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

துலாம்

மாமியார் தொல்லை அகலும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும். குல தெய்வ பிரார்த்தனையை செய்து முடிப்பீர்கள். மளிகைக் கடை வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடுபர்களுக்கு விரும்பிய உத்யோகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

விருச்சிகம்

பிரபலமானவர்களால் உதவி உண்டு. தொழிலில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பெண்களுக்கு கை, கால் வலி குறைந்து, ஆன் லைன் மற்றும் பங்கு சந்தையில் ஈடுபட்டவர்கள் நிலவரத்தை அறிந்து நிதானமுடன் செயல்படவும். தம்பதிகளிடையே அன்பு பலமாகும். உடல் நலம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

தனுசு

தம்பதிகள் அன்பின் திளைப்பர். பணம் பலவழிகளில் வரும். உடல் உற்சாகத்துடன் காணப்படும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். கமிஷன் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல தொதிகை கிடைக்கும். ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மகரம்

மார்கெட்டிங் பிரிவினர் புதுப் புது ஆர்டர்கள், ஏஜென்சி எடுப்பீர்கள். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். அலுவலக வேலைகளை விரைவாக முடிப்பீர்கள். வங்கிப் பணியாளர்கள் நிம்மதியடைவர். இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நண்பர்களின் பக்கபலம் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

கும்பம்

மளிகை வியாபாரிகளுக்கு அதிகமான லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் தங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். தங்களின் மகளின் சுபகாரியம் சம்பந்தமாக வெளியூருக்குச் சென்று ஆடை, அணிமணிகள் வாங்கிவருவீர்கள். உடற்பயிற்சி அவசியம் என உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மீனம்

கலைஞர்களுக்கு முன் பணம் கிடைக்கும். சம்பளம் கூடும். ஏழரை சனி நடந்தாலும் பண வரவுக்கு குறைவில்லை. பழைய நண்பரை சந்திப்பீர்கள். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். உடல் நலம் தேறும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

 

Tags:    

மேலும் செய்திகள்