ராசிபலன் (14-12-2025): சுபச் செய்திகள் இன்று தேடி வரும் நாள்..!

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.;

Update:2025-12-14 06:11 IST

இன்றைய பஞ்சாங்கம்

கிழமை: ஞாயிறு கிழமை

தமிழ் வருடம்: விசுவாவசு

தமிழ் மாதம்: கார்த்திகை

நாள்: 28

ஆங்கில தேதி: 14

மாதம்: டிசம்பர்

வருடம்: 2025

நட்சத்திரம்: இன்று பிற்பகல் 12-06 வரை அஸ்தம் பின்பு சித்திரை

திதி: இன்று இரவு 10-06 வரை தசமி பின்பு ஏகாதசி

யோகம்: அமிர்த, சித்த யோகம்

நல்ல நேரம்: காலை 07-45 to 08-45

நல்ல நேரம்: மாலை 03-15 to 4-15

ராகு காலம்: மாலை 04-30 to 6-00

எமகண்டம்: மாலை 12-00 to 1-30

குளிகை: மாலை 03-00 to 4-30

கௌரி நல்ல நேரம்: காலை 10-45 to 11-45

கௌரி நல்ல நேரம்: மாலை 1-30 to 2-30

சூலம்: மேற்கு

சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி

இன்றைய ராசிபலன்

மேஷம்

உத்யோகஸ்தர்களுக்கு மேலிடத்தில் மதிப்பு கூடும். விற்பனை பிரதிநிதிகளுக்கு ஆர்டர்கள் குவியும். நிர்வாகத் திறன் பளிச்சிடும். மருத்துவர்கள் சாதனைப் படைப்பர். பணப் புழக்கம் திருப்தி தரும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். உணவுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

ரிஷபம்

வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் மிகுந்த எச்சரிக்கைத் தேவை. குடும்பத்துடன் சிறுபயணம் ஒன்றை மேற்கொள்ள நேரலாம். தாமதமாகி வந்த திருமண முயற்சி சிலருக்கு இப்போது கை கூடி வர வாய்ப்புண்டு. மாணவர்கள் கல்வியில் மிகுந்த அக்கறை காட்டி வருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மிதுனம்

பொருளாதார நிலையில் திருப்திகரமான முன்னேற்றம் காணப்படும். வீடுகட்டும் எண்ணம் மேலோங்கும். தம்பதிகள் புரிதல் அதிகரிக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வெளியூர்களில் விடுதிகளில் தங்கிப்படிப்பவர்கள் உடல் நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கடகம்

தேவையில்லாத குழப்பம் நீங்கும். வேலையில் உற்சாகத்துடன் செயல்படுவீர். மேல்படிப்பிற்கு முயற்சிக்கலாம். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு சற்று அலைச்சல்கள் கூடும் வெளியூர் பயணம் இருக்கும். பெண்களின் பிரார்த்தனை நிறைவேறும். வாகன ஓட்டத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

சிம்மம்

எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். தம்பதிகள் புரிந்து கொள்வர். தேவைக்கேற்ப பணம் வரும். பெண்கள் சிக்கனத்தை கடைபிடிப்பர். பேச்சில் இனிமை கூடும். வீடடிற்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவீர்கள். தந்தையார் தங்களுக்கு உறுதுணையாக இருப்பார். உடல் நலம் சிறப்படையும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கன்னி

உத்யோகஸ்தர்கள் இன்று குடும்பத்துடன் சொந்த ஊர் வெளியூர் செல்வர். உறவினர்கள் சந்திப்பு ஏற்படும். அவர்களிடம் குடும்ப சமாசாரம் பேச வேண்டாம். இளைஞர்கள் கூடுதல் வேலை வாய்ப்பை பெறுவர். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். சுபச் செய்திகள் தேடி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

துலாம்

தாமதித்த அயல்நாட்டு பயணம் சாதகமாகும். தொழில் நஷ்டத்தை ஈடுசெய்வீர்கள். வெகுநாள் தலைவலி தீரும். உயர்கல்வி முயற்சிகள் கூடி வரும். வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். திருமணம் கூடி வரும். எதிரிகளின் வலிமை குறையும். மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வர்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

விருச்சிகம்

பூர்வீக சொத்து கிடைக்கும். தம்பதிகள் சேர்ந்து முடிவெடுப்பர். பயணத்தால் பயன் உண்டு. மாணவர்களின் குறிக்கோள் நிறைவேறும். பிள்ளைகளுடன் வெளியூர் சென்று வருவீர்கள். பணப்பற்றாக்குறை நீங்கும். புது நிலம், வீடு வாங்குவீர்கள். வாகன பராமரிப்பு செலவு உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

தனுசு

உத்யோகத்தில் அமைதி நிலவும். கடன் சுமை குறையும். மகிழ்வான மணவாழ்க்கை அமையும். சகோதரர்களின் கருத்து வேற்றுமை மறையும். வழக்கறிஞர்களுக்கு வெற்றி குவியும். உறவினரால் நன்மை உண்டு. புதிய நண்பர்கள் கிடைப்பர். கலைஞர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மகரம்

வழக்கில் திருப்பம் காணலாம். சகோதரிக்கு திருமணம் செட்டாகும். பிள்ளைகளால் பெருமை கூடும். விற்பனை கூட்ட சலுகைகளை தருவீர்கள். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். பண வரவில் பற்றாக்குறை இருக்கும். பூர்வீக சொத்தால் பயன் பெறுவீர்கள்.மாணவர்கள் பாராட்டப்படுவர்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கும்பம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

மீனம்

குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். தாய்வழி உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். மேலதிகாரிகளிடம் அமைதி காக்கவும். மனைவியின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். ஆரோக்கியத்தில் பிரச்சினை இல்லை.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை




 


Tags:    

மேலும் செய்திகள்