5 தேசிய விருதுகள்...72 வயதிலும் முத்தக் காட்சி...யார் அந்த நடிகை தெரியுமா?

திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு பிறகு, பல கதாநாயகிகள் தங்கள் படங்களைக் குறைத்துக் கொள்வார்கள்.;

Update:2025-08-24 19:45 IST

மும்பை,

இந்த நடிகை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தனது நடிப்புத் திறமைக்காக 5 தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது, ​​72 வயதாகும் இந்த நடிகை ஒரு முத்தக் காட்சியில் நடித்ததன் மூலம் மீண்டும் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார்.

பொதுவாக, கதாநாயகிகள் படங்களில் மிகக் குறுகிய காலமே நடிப்பார்கள். திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு பிறகு, பல கதாநாயகிகள் தங்கள் படங்களைக் குறைத்துக் கொள்வார்கள். சிலர் படங்களுக்கு விடைகொடுத்து, துறையை விட்டு விலகிச் செல்வார்கள்.

அதே நேரத்தில், இன்னும் சிலர் குழந்தைகள், பேரக்குழந்தைகள் மற்றும் கொள்ளுப் பேரக்குழந்தைகள் இருந்தபோதிலும் படங்களில் தொடர்ந்து நடிப்பார்கள். இந்த நடிகையும் இந்த வகையைச் சேர்ந்தவர்தான்.

இவர் சுமார் 50 ஆண்டுகளாக திரைப்படத் துறையில் இருக்கிறார். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த்திருக்கிறார். ஐந்து தேசிய விருதுகள் உள்பட பல விருதுகளை வென்றுள்ளார். அவர் வேறு யாருமில்லை, பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மிதான்.

1970-80களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஷபானா ஆஸ்மி தனது முதல் தேசிய விருதை 1975 இல் பெற்றார். 1983 இல் 'ஆர்த்' படத்திற்காக தனது இரண்டாவது தேசிய விருதைப் பெற்றார்.ஷபானா ஆஸ்மிக்கு தற்போது 74 வயது. இந்த வயதிலும் அவருக்கு படங்கள் மீது அதே ஆர்வம் தொடர்கிறது.

இதற்கிடையில், கடந்த 2023-ல் வெளியான 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்தில், நடிகர் தர்மேந்திராவுடன் ஷபானா ஒரு முத்தக் காட்சியில் நடித்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்