"பெண்களை மையப்படுத்தாத குடும்பம்.. அதன் லட்சியத்தை அடைவதில்லை" - கவிஞர் வைரமுத்து
மகளிரின் பெருமையறிந்து மதிப்போடு வாழ்த்துவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.;
சென்னை,
கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
உலகத் தாயினத்துக்கு
மகளிர்தின வாழ்த்துக்கள்
மண்ணில் பாதி மகளிர்;
மக்களில் பாதி மகளிர்
சமூகம் இயங்குவது
பெண்களால்
பெண்களை மையப்படுத்தாத
குடும்பம் நிறுவனம் அரசியல்
கலை இலக்கியம் எதுவும்
அதன் லட்சியத்தை
அடைவதில்லை
ஆண் ஒரு சிறகு
பெண் ஒரு சிறகு
சமூகப் பறவை
இரண்டு சிறகுகளால்
பறந்தால்தான்
இரைதேட முடியும்
சமையல் அறையிலிருந்து
பெண்ணுக்குக் கிட்டும்
விடுதலையைத் தான்
பூரண விடுதலையென்று
போற்றுவேன்
மகளிரின் பெருமையறிந்து
மதிப்போடு வாழ்த்துகிறேன்
வாழ்க பெண்ணினம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.