"டூரிஸ்ட் பேமிலி" படத்தின் 2வது பாடல் வெளியீடு

இத்திரைப்படம் அடுத்த மாதம் 1ம் தேதி வெளியாக உள்ளது.;

Update:2025-04-16 17:20 IST

சென்னை,

'அயோத்தி, கருடன், நந்தன்' உள்ளிட்ட வெற்றிப்படங்களையடுத்து சசிகுமார் தற்போது நடித்துள்ள படம் 'டூரிஸ்ட் பேமலி'. இந்த படத்தை 'குட் நைட்' படத்தினை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. அபிஷன் ஜீவிந்த் இயக்கும் இந்தப் படத்தில் சசிகுமாருடன் சிம்ரன் நடிக்கிறார்.

ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அடுத்த மாதம் 1ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் முதல் பாடலான 'முகை மழை' சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இப்படத்தின் 2-வது பாடலான 'ஆச்சாலே' வெளியாகி இருக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்