நடித்தது 6 படங்கள்...1 மட்டுமே வெற்றி - புகைப்படத்தில் உள்ள அந்த நடிகை யார் தெரியுமா?
தற்போது அவர் கையில் எந்த படங்களும் இல்லை.;
சென்னை,
தங்கள் அழகு மற்றும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தாலும், பல கதாநாயகிகள் திரையுலகில் பிரபலத்தை அடைய முடியாமல் போகிறார்கள்.
இப்போது நாம் பேசும் கதாநாயகியும் அந்தப் பட்டியலில் உள்ளவர்தான். அவர் நடித்த அனைத்து படங்களும் அவருக்கு ஏமாற்றத்தைதான் கொடுத்தன.
அவர் யார் தெரியுமா?. அவர்தான் நடிகை கெட்டிகா ஷர்மா. 2021-ல் வெளியான ரொமாண்டிக் படத்தின் மூலம் அறிமுகமானார். இருப்பினும் , அந்த படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. அதன் பிறகு, அவர் லக்சயா, ரங்கா ரங்கா வைபவங்கா மற்றும் புரோ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
சமீபத்தில், அவர் நடிப்பில் வெளியான ’சிங்கிள்’ படம் மட்டுமே வெற்றி பெற்றது. இதற்கு முன்பு கெட்டிகா நடித்த படங்கள் பெரிதாக கவனம் பெறவில்லை. தற்போது அவர் கையில் எந்த படங்களும் இல்லை, ஆனால் அவர் சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து வருகிறார்.