மறுமணம் குறித்து நடிகர் பார்த்திபனின் பதில்
பார்த்திபனின் ஒரு பேட்டியில் தனது மகன் திருமணம் முடிந்ததும் தானும் திருமணம் செய்ய போவதாக கூறிய விஷயம் வைரலானது.;
பார்த்திபன் மற்றும் நடிகை சீதா இருவரும் 'புதியபாதை' படத்தின் போது காதலித்து, 1990ல் திருமணம் செய்தனர். இவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா என இரண்டு மகள்களும், ராதா கிருஷ்ணன் என்ற வளர்ப்பு மகனும் உள்ளனர். 2001ல் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2004ல் விவாகரத்து பெற்றனர்.
பார்த்திபனின் இரு மகள்களுக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது. தற்போது தனது மகன் ராதா கிருஷ்ணனுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே ஒரு பேட்டியில் தனது மகன் திருமணம் முடிந்ததும் தானும் திருமணம் செய்ய போவதாக கூறிய விஷயம் வைரலானது.
இதுதொடர்பாக பார்த்திபன் கூறியதாவது, “திருமணம் ஒருமுறை தான், மனைவி என்கிற ஸ்தானமும் ஒருவருக்கு தான், அதில் தீர்மானமாக இருக்கிறேன். மனமாற்றம் ஏற்படுகிற அளவுக்கு புதிதாக ஒன்றும் நிகழவில்லை. என் இரண்டு பெண்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. எனக்கும் என் பையனுக்கு தான் இன்னும் ஆகல என ஜாலியாக, காமெடியாக சொன்ன விஷயம் அது. நிஜ வாழ்க்கையில் அப்படி சொல்லவில்லை. இந்த செய்தி வெறும் ரசிப்புக்காக மட்டுமே” என்றார்.