மம்முட்டி படத்தின் முதல் டிக்கெட்டை வாங்கிய மோகன்லால்

மோகன் லால் ‘சத்தா பச்சா’ புதிய திரைப்படத்தின் முதல் டிக்கெட்டை வாங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2026-01-20 20:47 IST

அத்வைத் நாயர் இயக்கத்தில் நடிகர்கள் அசோகன், ரோஷன் மேத்யூ, விஷாக் நாயர் மற்றும் இஷான் சௌகத் ஆகியோர் நடித்துள்ள புதிய படம் ‘சத்தா பச்சா’. இசையமைப்பாளர்கள் ஷங்கர்-இஷ்ஸான்-லோய் கூட்டணி இசையமைக்கும் முதல் மலையாள திரைப்படமான ‘சத்தா பச்சா’ வரும் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாகின்றது.

இந்தப் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று துவங்கியுள்ள நிலையில் முதல் டிக்கெட்டை நடிகர் மோகன் லால் வாங்கியுள்ளதாகப் படக்குழு சிறப்பு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

மலையாள திரையுலகின் இளம் நடிகர்கள் இடம்பெற்றுள்ள இப்படத்தில் பிரபல நடிகர்கள் மம்மூட்டி மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்